வெற்றிகரமான கற்றலுக்கு உள ஆரோக்கியம் இன்றியமையாதது.
உள ஆரோக்கயித்துக்கு முன்னுரிமை கொடுத்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்
திட்டமிடப்பட்டால் பிள்ளைகள் பரீட்சையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி
பெறுவார்கள்.
எமது உள சமூக சூழல் (psycho-social environment) எமது உள ஆரோக்கியத்தில் அதிக தாக்கம் செலுத்துகிறது.
அதாவது, பெற்றோர், ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட பாடசாலை சமூகத்தின் உள ஆரோக்கியம் பிள்ளைகளின்
உள ஆரோக்கியத்தில் அழுத்தம் செலுத்தும்.
முரண்பாடுகளற்ற அனைவரையும் அரவணைக்கும் பாடசாலை சூழலை உருவாக்குவதற்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினர்
முக்கியத்துவம் கொடுத்தால் சிறந்த பெறுபேறுகளை பெறுவதோடு வளமான சந்ததிகளையும் உருவாக்கலாம்.
வாழ்க்கை குறிக்கோள், இலக்குகள் மற்றும் தூர நோக்குள்ள பிள்ளைகளை உருவாக்குவது பாடசாலையின் பணி.
ஒரு பாடசாலையில் இடம் பெறும் முழுமையான செயற்பாடுகள் ஊடாகவே இப்பணி
வெற்றி பெற முடியும்.
இப்பணியை செய்வதற்கு தேவையான நிபுணத்துவ தேர்ச்சிகளை
வளர்த்துக்கொள்வதற்கே
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
பெற்ற பயிற்சியை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த கற்றல் கற்பித்தல்
சூழலை உருவாக்க அதிபர் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கு பெற்றோர்
ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு தமது நிபுணத்துவத்தை பிரயோகிப்பதற்கு சாதகமான சூழல் இருக்கும் போது
சிறப்பான வாழ்க்கை குறிக்கோள், இலக்குகள் மற்றும் தூர நோக்குள்ள பிள்ளைகளை உருவாக்க முடியும்.
இப்படி உருவாக்கப்படும் பிள்ளைகள் பரீட்சையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சிறப்பு
வெற்றி பெறுவார்கள்.