தகுதி -Qualification

 • எல்லாவற்றிலும் சிறந்ததை, தரமானதைத் தேடுகிறோம்.
 • மருந்தெடுக்கச் சென்றால் நிபுணரை (specialist) நாடுகிறோம்.
 • ஆசிரியர்களின் தகுதி (qualification) பற்றி அலட்டிக் கொள்கிறோம்.
 • மார்க்கெட் அல்லது சந்தைக்குச் சென்றால் தரமான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்குகிறோம்.
 • துணி வாங்கச் சென்றால் பல கடைகளுக்கு ஏறி இறங்கி தரமானதைத் தேடி அலைகிறோம்.

எல்லாவற்றிலும் தரம் பார்க்கிறோம்.

சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதில் அனைத்தையும் தரமான வகையில் நிறைவேற்றுவதில் அதிகம் ஈடுபாடு காட்டுவர். தம்மைப் பற்றி யோசிக்காமல் தம் தேவைகளையும் விட்டுக்கொடுத்து குழந்தைகளுக்காக எது வேண்டுமோ அதை விட மேலதிகமாகவே செய்யும் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அனைத்திலும் தரமும் ( Quality & Qualification ) தகைமையும் தேடும் நாம், ஒரு பிள்ளைக்கு தந்தையாக.. தாயாக..என்ன தகைமை எமக்கிருக்கிறது என்று வினவப்பட்டால்அதற்கு எவ்வாறு பதிலளிக்கலாம்..?

பெற்றோர்களுக்கான சில கேள்விகளை நிகழ்ச்சிகளில் புரிதலை ஏற்படுத்த நாம் கேட்பதுண்டு.திருமணத்திற்கு முன்னர் ஆண்,பெண் வேறுபாடுகளை, அவர்களின் பண்புக் கூறுகளை, அவர்களைக் கையாளும் வழிமுறைகளை அல்லது திருமண பந்த வாழ்வியல் தத்துவங்களை அறிந்து தானா நீங்கள் திருமணம் முடித்தீர்கள்..?

 • கர்ப்ப கால நிலைகளை சரியாக அறிந்து, புரிந்து அதற்கேற்ப வகையில் நடந்து கொண்டவர்கள் யார்…?
 • அக்காலத்தில் மனைவியின் மனோநிலை புரிந்து, அவர்களது மெல்லிய உணர்வுகள் அசெளகரியப்படாது கவனக் குவிப்போடு நடந்து கொண்டவர்கள் யார் …?
 • பிள்ளைப் பேறுக்காக வைத்தியசாலை செல்லும் முன்பு குழந்தை பற்றியும் பிரசவ நிலை விவரங்களையும் சரியாகத் தெரிந்து கொண்டு சென்றவர்கள் யார்..?
 • பிள்ளை வளர்ப்புப் பற்றி, குழந்தை உளவியல் குறித்து, அவர்களது விருத்தியல் உளவியல் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்…?
 • பிள்ளைகளின் உணர்வுகள், மனவெழுச்சிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடந்து கொள்ளும் பெற்றோர்கள் எத்தனை பேர்…?
 • ஆகாரம் பற்றியும் சுகாதாரம் பேணப்படுவது குறித்தும் சரியான புரிதல் உள்ளவர்கள் யார்.?
 • நல்லறங்களை ,ஒழுக்கத்தை ,கட்டுக்கோப்பான வாழ்வை அவர்களில் ஏற்படுத்தும் வல்லமை எம்மில் உண்டா..?
 • பிள்ளை வளர்ப்%

உலகில் பிரச்சினை என்று ஒன்றில்லை. உண்மையில் நாம்தான் பிரச்சினை. அதற்கான தீர்வை வெளியே தேடுகின்றோம். ஆனால் அது எமகுள்ளேயே உண்டு என்பதை கவனத்திற் கொள்வதில்லை.

பிரச்சினை என்ற பூதாகரமான மாயை ஒன்று வெளியே உருவாக்கப்பட்டுள்ளது. அதனாலேயே மலை போல் எம்முன்னால் அது உள்ளது. உண்மையில் ஒன்றை கையாளும் திறன் இல்லாததே அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம்.